நீலகிரி, செப்.15-
நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமான மரங்களை கணக்கெடுத்து அகற்ற குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் கீதா பிரியா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து குன்னூர், காந்திபுரம் அருகே மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மரம் அகற்றப்பட்டது. இதனால் அச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

Leave A Reply