கல்வி தொழில்நுட்பத்திலும், கணினி வழி கற்பித்தலிலும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான வேதாந்த்  வரும் நவம்பர் மாதம் 2 வது பன்னாட்டு அளவிலான ஐ.எஸ்.எல் போட்டித் தேர்வுகளை நடத்த உள்ளது.

உலக அளவில் மாணவர்களின் கற்றல் திறனையும், போட்டி மனப்பாங்கினையும் வளர்ப்பதற்காக ஐ.எஸ்.எல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தையின் கணிதத் திறனையும் அறிவாற்றலையும் சோதிப்பதற்கான கணினி வழிப் போட்டித் தேர்வுகளை நடத்தி, அவர்களின் கற்றல் திறனை ஆழ்ந்து மதிப்பீடு செய்ய இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் முன்னணி இடங்களைப் பிடிப்பவர்களுக்கு கல்விசார் பரிசுகள் வழங்கப்படும். அரிய வாய்ப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்று உள்ளுறைப் பயிற்சியினை மேற்கொள்ளவும், சுவிட்சர்லாந்தின் சி.இ.ஆர்.என்  நிறுவனத்தைப்  பார்வையிடவும் அனுப்பப்படுவார்கள்.

Leave A Reply

%d bloggers like this: