சென்னை;
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தை இன்று நேரில் ஆஜராகி ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள சிபிஐ அழைப்பு விடுத்திருந்தது.

சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர் அனைவரையும் விடுவித்து விசாரணையையே முடிக்குமாறு உத்தரவிட்டதையடுத்து கார்த்திக் சிதம்பரம் ஆஜராகாமல் விசாரணையை தவிர்த்தார்.

விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்று  சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரம் கூற்றை மறுத்தனர்.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் “சிபிஐ என்னையே விசாரிக்க வேண்டுமே தவிர என் மகனை இதில் துன்புறுத்துவது கூடாது.ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அனுமதியை வழங்கியதுசெல்லும் என்று எஃப்.ஐ.பி.பி அதிகாரிகள் எழுத்துப்பூர்வ பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ தவறான தகவலைப் பரப்பி வருவது வருத்தத்திற்குரியதாகும்”. கூறியுள்ளார்.

Leave A Reply