எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (“எஸ்பிஐ லைஃப்’) செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் பொதுப் பங்கு வெளியீட்டைத் தொடங்கவுள்ளது.

பங்கு விலை ரூ. 685 முதல் ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் 2-ஆவது மண்டலத் தலைவர் எம்.ஆனந்த்  கூறியுள்ளார்.  பொதுப் பங்கு வெளியீட்டின் மூலமாக  ரூ.10 முக மதிப்பு கொண்ட 12 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

எட்டு கோடி பங்குகள் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் 4 கோடி பங்குகள் பிஎன்பி பரிபா கார்டிஃப் எஸ்.ஏ. நிறுவனத்தால் மற்றும் நிறுவனர்களின் பங்கு மூலதனத்திலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதில், தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 20 லட்சம் பங்குகளும் அடங்கும். பங்கு விலை ரூ. 685 முதல் ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு, விற்பனை விலையிலிருந்து பங்கு ஒன்றுக்கு ரூ. 68 தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 21 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் தேவைப்பட்டால் 21-களின் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம். பங்கு விற்பனை செப்.22 நிறைவுபெறும் என்றார் அவர்.

Leave A Reply

%d bloggers like this: