நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு 50 விழுக்காடு  வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி பணி வாய்ப்பு பெற்ற 5 ஆயிரம் பேர் இதுவரை பணிநிரந்தரம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை தேர்வு செய்ய கடந்த ஜூலை 4ஆம் தேதி என்எல்சி நிர்வாகம்  அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஏற்கெனவே நிலம் வழங்கி பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்கிற நிபந்தனை இல்லை. இதை எதிர்த்து நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான கடலூரைச் சேர்ந்த சேகர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நீதிமன்றத்தின் உத்தரவை  என்எல்சி நிர்வாகம் சரியாக நிறைவேற்றியுள்ளதா என்று  மத்திய அரசின் நிலக்கரித்துறை, தமிழக அரசின் சமூக நலம் மற்றும் தொழில்துறை முதன்மைச் செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Leave A Reply