ஆர்எஸ்எஸ் பரிவாரிகள் பிற மதத்தவருக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்று நான் பேசிவருகிறேன்.அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து வருகிறேன். இப்போது அவர்கள் பிற மதங்களுக்கு மட்டுமல்ல இந்து மதத்திற்கும் எதிரானவர்கள் என்பது உறுதியாகிப் போனது. “இந்து  கடவுள்கள் எல்லாம் கிரிமினல்களே, கொலைகாரர்களே” என்று சர்வசாதாரணமாக கூறும் ஜெயந்திரரின் கூற்றை ரிபப்ளிக் டி வி ஒளிபரப்பியுள்ளது. இப்படி பிறமதத் தலைவர் ஒருவர் பேசியிருந்தால் நாட்டில் எவ்வளவு பெரிய கலவரத்தை உருவாக்கியிருப்பார்கள்! இந்த ஒப்புதல் வாக்குமூலம் பற்றி ஓர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் அலட்டிக் கொள்ளாமல் சொன்னது: “இது ஒன்னும் புதிய டேப் அல்ல, ஏற்கெனவே வந்ததுதான்.” அப்படியென்றால் அப்போதே கொந்தளித்து கிளம்பியிருக்க
வேண்டும் அல்லவா, ஏன் கிளம்பவில்லை? அவர்களது லட்சியம் இந்து மதத்தை காப்பது அல்ல, பிராமணிய சமூக கட்டமைப்பை காப்பதுதான். அதற்கு ஆபத்து வந்தால்தான் கிளர்ந்தெழுவார்கள்.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: