“தமிழ்நாட்டில் எதாவது ஒரு கோரிக்கையை வைத்துக்கொண்டு எதாவது ஒரு கூட்டம் போராடிக்கொண்டே இருக்கிறது” என எரிச்சலோடு தமிழைசையோ, யாரோ ஒரு பாஜக தலைவர் எரிச்சல்பட்ட செய்தி வெளிவந்தது. அதற்கும் இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தடாலடி உத்தரவுக்கும் நிச்சயம் சமபந்தமிருப்பதாகவேத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்கள், அதிகாரவர்க்கத்தின், ஆளுபவர்களின் மக்கள் விரோத மனப்பான்மையை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. தங்கள் உத்தரவுகளுக்கும், விருப்பங்களுக்கும் கீழ்ப்படியாத மாநில மக்களாக தமிழகம் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அதுதான் போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கும் போக்கை காவல்துறை, நீதித்துறையெல்லாம் சேர்ந்து தீவீரப்படுத்துகின்றன. போராட்டக் குணத்தை மழுங்கடித்து விட துடிக்கின்றன.

அதிமுக எம்.எல்.ஏக்களைப் போலவே தமிழக மக்களும் இட்ட கட்டளைகளைச் செய்துகொண்டு காலில் விழுந்து கிடக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

அது ஒருபோதும் நடக்காது.

நீதிமன்றங்கள், அநீதி மன்றங்களானால், மக்கள் அவைகளையும், அவைகளின் உத்தரவுகளையும் எதிர்த்துப் போராடுவார்கள்! அதற்கான ஒரு நாளும் விரைவில் வரும்.

இன்று போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது பாய்ந்த நீதிமன்றம் நாளை போராடும் யார் மீதும் இதே போல சீறத்தான் செய்யும்.

போராடுகிறவர்கள், போராட்டத்தை நம்புகிறவர்கள் அனைவரும் இப்போதே விழித்துக்கொள்வதும் கரம்கோர்த்து நிற்பதும், ஒன்றாக அணிதிரள்வதும் காலத்தின் தேவை.

  • Mathava Raj

Leave A Reply

%d bloggers like this: