அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்குள் வேலைநிறுத்த விளக்க வாயிற்கூட்டம் வியாழனன்று (செப்,14) நடைபெற்றது.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத பணப் பலன்களை வழங்கக்கோரியும், 2003 ம் ஆண்டிற்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரியும் 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த கூட்டம் நடைபெற்றது. வரும் 24 ந் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தையொட்டி, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள பணிமனை முன்பு சம்மேளனக் குழு உறுப்பினர் கோவலன் தலைமையில் நடைபெற்றகூட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி ,ஐஎன்டியுசி. எச்.எம்.எஸ் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: