கோலாலம்பூர்,
மலேசியாவில் மதரசா பள்ளி ஒன்றில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்க வந்த இஸ்லாமிய மத போதனை பள்ளியான ‛தருல் குரான் இட்டிஃபா’ எனும் பள்ளியில், அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக் தீ விபத்து திடீரென ஏற்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply