தஞ்சாவூர்;
தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின்(சிஐடியு) 31 ஆவது ஆண்டு மாநிலப் பேரவை, போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய அறைகூவல் விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் 31 ஆவது மாநிலப் பேரவை செப்டம்பர் 5,6 தேதிகளில் மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. சங்கக் கொடியினை மாநில துணைத்தலைவர் ஏ.ரைமண்ட் ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் எஸ்.முத்துவேல் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். தஞ்சை பணிமனை செயலாளர் பி.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார்.

பேரவையை துவக்கி வைத்து சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் உரையாற்றினார். தீர்மானத்தை முன்மொழிந்து துணை பொதுச்செயலாளர் பொன்.சோபனராஜ், எம்.கனகராஜ் ஆகியோர் பேசினர்.

மாநில பொருளாளர் நா.முருகேசன் வரவு செலவு அறிக்கையை முன்மொழிந்து பேசினார்.
விரைவுப் போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.நடராஜன் வேலை அறிக்கையை முன்மொழிந்து பேசினார்.

பேரவைக் கூட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜூ, துணைச் செயலாளர் கே.அன்பு, அ.போ.க.ஊழியர் சங்கம் சார்பில் பி.முருகன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதன்கிழமை நடைபெற்ற பேரவையில், போக்குவரத்து ஊழியர் சங்க குடந்தை செயலாளர் ஜி.மணிமாறன் வாழ்த்திப் பேசினார். சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.சவுந்தரராசன் பேரவையை நிறைவு செய்து உரையாற்றினார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு
இப்பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஜி.செந்தில், பொதுச் செயலாளராக எம்.கனகராஜ், பொருளாளராக எம்.ரவி, துணை பொதுச்செயலாளர்களாக சி.குமார், எம்.டென்னிஸ் ஆண்டனி, சுதர்சிங், உதவித் தலைவர்களாக ஏ.ரைமண்ட், ஆர்.கருமலையான், எஸ்.நடராஜன், எம்.கண்ணன், எஸ்.முத்துவேலு மற்றும் உதவிச் செயலாளராக பி.வெங்கடேசன் உள்ளிட்ட 34 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: