சென்னை;
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 3 மாதங்களாக பெப்சி அமைப்புக்கும், திரைப் படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது. பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி முன்னிலையில் நடத்திய பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எட்டாததால் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் 40 -க் கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு தடைப்பட்டது.

பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்க தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அனைத்து சங்கங்களின் பிரச்சினையும் பேசி முடிக்கப்பட்டு தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால் திரைப்படத்

தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு முதல் படப்பிடிப்பு கள் தொடங்கின.

Leave A Reply

%d bloggers like this: