லக்னோ:
உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், பாக்பட் நகரில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார்  60 பேருடன் சென்ற அந்த  படகு கவிழ்ந்தது. அதிக பாரம் காரணமாக படகு கவிழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக படகில் பயணம் செய்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
இந்த கோர சம்பத்தில் 15 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply