”ஐந்து மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்”

” அரசியல் ஆதாயத்துக்காகவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் செயல்படுகின்றன”

எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டியதைப் புரிந்துகொள்ளாமல், ஏன் போராட்டம் நடத்துகின்றனர் ‘

” , 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்”

” கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது ”

” ‘எனக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்”

– சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

நீதிபதி கிருபாகரனின் இந்தக் கருத்துக்கள் அனைத்தும் கடும் கண்டனத்திற்கு உரியவை.

`1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவக்கலூரியில் இடம் கிடைகாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம் அரசுபள்ளி ஆசிரியர்களா? மாணவர்களுக்கு சம்ப்ந்தமில்லாத பாடதிட்டத்தில் தேர்வு நடத்தி அரசுப்பள்ளி மாணவர்களை வெளியேற்றிவிட்டு ஆசிரியர்களை குறை சொன்னால் என்ன அர்த்தம்?

அரசியல் ஆதாயத்திற்காகவே எல்லாக் கட்சிகளும் செயல்படுகின்றன எனறு பொத்தம பொதுவாக அடித்த்தால் அரசியல் கட்சிகளின் போராடடங்களில் எந்த அர்த்தமும் இல்லையா? அரசியல் கட்சிகள்தான் மக்களை பிரதிநித்துவப்படுத்துகின்றனவே தவிர நீதிமன்றங்கள் இல்லை. மக்கள் மன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மட்டுமே நீதிபதிகளின் வேலை .

40 ஆயிரம் 50 ஆயிரம் வாங்கும் அரசு ஊழியர்கள் தங்கள் சட்டபடியான உரிமைகளுக்காக போராட்டம் நடத்தக் கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கிறதா? எவ்வளவு சம்பளம் வாங்குறவர்கள் போராடலாம் என்று உச்சவரம்பு ஏதும் வைத்திருக்கிறீர்களா? தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்கும் சமூக ஆர்வலர்கள் பபேசுவதுபோல ஒரு நீதிபதி பேசலாமா?

’’ கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது ’’ என்பது உங்கள் தனிப்பட்ட ஆசையாக இருக்கலாம். அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்ப்டை உரிமைகளின் படி அந்த உரிமையை எந்த சமூகப்பிரிவினருக்கும் நீங்கள் மறுக்க இயலாது.

நீதிபதிகளின் தீர்ப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்பதுதான் சட்டமே தவிர உங்கள் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்று சொல்ல சட்டத்தில் இடமில்லை. உங்களை விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குபாயும் என்றால் நீங்கள் என்னபுனித ஜார்ஜ் மன்னரா?

  • Abdul Hameed Sheik Mohamed

Leave A Reply

%d bloggers like this: