கோவை, செப். 14-
நீட்தேர்வில் இருந்து தமிழகதிற்கு நிரந்தர விலக்களிக்கக்கோரி வியாழனன்று கோவையில் பாரதியார் பல்கலை கழகம் மற்றும் ஐடிஐ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் எனக்கோரி கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஐடிஐ தொழிற்கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் வியாழனன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்வி நிறுவன வாயிலில் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ், செயலாளர் பிரபாகரன் மற்றும் செந்தில் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல், கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் வியாழனன்று இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: