சென்னை பெருநகர தையல்தொழிலாளர் சங்கம் பெரம்பூர் பகுதியின் 10வது மாநாடு வியாசர்பாடியில் நடைபெற்றது.

தையல்தொழிலாளர் சம்மேளனச் செயலாளர் ஆர்.வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்டசெயலாளர் பி.கோவிந்தசாமி, மாவட்டத்தலைவர் சி.திருவேட்டை ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். நலவாரியப் பயன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும், தொழிற்சங்க மூலம் நலவாரியப் பயன்களை நடைமுறைப்படுத்தவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

புதிய நிர்வாகிகள்- பெரம்பூர் பகுதித்தலைவராக பி.கோவிந்தசாமி, செயலாளராக ஜி.வேணுகோபால், பொருளாளராக என்.நாராயணன் உள்ளிடட 16 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: