கும்பகோணம்;
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கடந்த 2008-ம் ஆண்டு ஆரோக்கியராஜ் என்பவருடைய விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த காதர்பாட்ஷா, தலைமைக் காவலராக இருந்த சுப்புராஜ் உள்ளிட்ட போலீஸார் சிலைகளை கைப்பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் சென்னையில் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் விலை பேசி விற்றனர்.

சிலை கடத்தும் காலத்தில் பணியில் இருந்து தற்போது ஓய்வு பெற்ற கான்ஸ்டபிள் கடத்தும் செய்தியை கடிதமாக எழுதி அனுப்பி இருந்தார்.இதனை அறிந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.ஜூன் மாதம் வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த சுப்புராஜை சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சிலைக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட, திருவள்ளூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த காதர் பாட்ஷா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய முயன்றபோது தலைமைமறைவாகிவிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். அந்த மனுவும் ஏற்கப்படாத நிலையில் கும்பகோணத்தில் தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர் பாட்ஷாவை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

Leave A Reply