சிங்கப்பூர் சிட்டி;
சிங்கப்பூரின் அதிபராக மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஹலிமா யாகோப் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஹலிமா சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங்யாமின் பதவிக்காலம் முடிவதையடுத்து, அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.அதிபர் பதவிக்கு மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடலாம் என்று சமீபத்தில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சாலே மரிக்கான், நாடாளுமன்ற உறுப்பினர் ஹலிமா யாகோப், கப்பல் நிறுவனத்தின் தலைவர் பரீத் கான் என்பவர் உட்பட 5 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர்.

மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஹலிமா யாகோப்பின் மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அதிபர் பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆளும் மக்கள் நடவடிக்கை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சுமார் 20 ஆண்டுகளாக ஹலிமா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: