நய்பிய்டா;                                                                                                                                                                                         மியான்மரில் இருந்து வங்காள தேச எல்லைக்கு வரும் லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் வழங்கி சீக்கிய தொண்டு அமைப்பு ஒன்று உதவி செய்து வருகிறது. இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் கால்சா என்ற சீக்கிய தொண்டு அமைப்பு இந்த உதவிக்கரங்களை நீட்டி வருகிறது.

வங்காளதேசத்தின் எல்லை நகரமான தேக்நாக் பகுதிக்கே சென்று தொண்டு அமைப்பினர் உதவி செய்து வருகின்றனர். வங்கதேச எல்லையில் நிலைமை மிகவும் மோசமாக தான் உள்ளது என்று இந்த தொண்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமர்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சுமார் 50 ஆயிரம் மக்களுக்கு உதவிகளை வழங்க தயார் நிலையில் வந்தோம்; ஆனால் இங்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் உள்ளனர்; அவர்கள் தண்ணீர், உணவு, ஆடைகள் மற்றும் தங்குமிடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்; நாங்கள் தார்ப்பாய்கள் ஏற்பாடு செய்து உள்ளோம், ஆனால் எங்களுடைய தயார் நிலைக்கு அதிகமாக அகதிகள் உள்ளனர்; அவர்களுக்கான தேவையை நிறைவேற்ற கூடுதல் கால அவகாசம் எடுக்கும் எனவும் அமர்பிரித் சிங் குறிப்பிட்டு உள்ளனர்.மேலும், யாரும் உணவின்றி பசியோடு இரவு தூங்க செல்லக்கூடாது என்பதே எங்களுடையமுக்கிய நோக்கமாகும், சிறார்கள் ஆடையின்றி சுற்றி வருகிறார்கள், உணவிற்காக பிச்சை எடுக்கிறார்கள். முகாம்களில் இடம் கிடைக்காதவர்கள், யாராவது உணவு கொடுப்பார்கள் என சாலை ஓரங்களில் காத்திருக்கின்றனர் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply