சென்னை;
உழைக்கும் மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்காகவும் தனது எழுதுகோலை ஏந்திய தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவரும் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான கவிஞர்.தமிழ் ஒளி ,1947-ல் எழுதிய குறுங்காவியம்தான் ‘வீராயி’ .

தமிழ்ச்சமூக பெருமிதத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் சாதிய வன்மத்தை அதன் பண்பாட்டு போலித்தனத்தை கேள்விக்குள்ளாக்கிய எழுத்துக்களில் ஒன்றுதான் ‘வீராயி’.
இந்த குறுங்காவியத்தின் மையப்பாத்திரமானஒடுக்கப்பட்ட சமூகத்தை ச்சேர்ந்த “வீராயி” சாதியடுக்குகளின் மேலடுக்கிற்கு உயர்த்திக்கொண்ட ஒரு சமூகத்தைச்சேர்ந்த ஓர் இளைஞனை காதலித்து மணம் புரிகிறாள், அதுவும் சாதி இந்துக்களிடம் உயிர்பலியாவதற்கே.
சமகால நிஜங்களின் அதிர்வுகளைக்கொண்ட இக்காவியக்கரு ,ஒரு நவீன நாடகமாக உருவாக்கம் பெறுகிறது.

மேலும் புலம் பெயர்ந்து பிறநாடுகளுக்கு சென்று உழைக்கும் தொழிலாளர்களின் சித்திரத்தை புதிய வெளிச்சத்தில் இனம் காட்டும் இந்நாடகம் இறுதியில் இந்திய மற்றும் தமிழ் பெருமிதங்களை கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழ் ஒளியின் வீராயி காவியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வரிகளைக்கொண்டு அப்பிரதியினது முழுமையை வெளிக்கொண்டு வந்து நிகழ்வாக்கியிருக்கிறார் இந்நாடகத்தின் நெறியாளுனர் பிரளயன்.

வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘சென்னை கலைக்குழு’ இந்த “வீராயி” நாடகத்தை மேடையேற்றுகிறது.

‘கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு’ ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் ஆர்.நல்லகண்ணு,ஜி.ராமகிருஷ்ணன், கி.வீரமணி,தொல்.திருமாவளவன், ச.செந்தில்நாதன்,ஈரோடு.தமிழன்பன், தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், சு.வெங்கடேசன்,பிரின்ஸ் கஜேந்திர பாபு,திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர்,முனைவர் முருகன், பதிவாளர் முனைவர்.பெருவழுதி, மயிலை பாலு,கவிஞர்.இரா.தெ.முத்து ,கலை. மணிமுடி ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களை வாழ்த்திப்பேசுகின்றனர்.

அனுமதி இலவசம் !

 

Leave A Reply

%d bloggers like this: