ஸ்ரீ நகர்;
அமர்நாத் யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் வகுத்துக் கொடுத்ததாக கூறப்படும், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அபு இஸ்மாயில் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் பதாக்குதல் நடத்தினர். இதில் 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியாயினர். 19 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அபு இஸ்மாயில்தான் காரணம் என்றும், அவர்தான் தாக்குதலுக்கு திட்டமிட்டுக் கொடுத்ததாகவும் பாதுகாப்புப் படையினர் குற்றம் சாட்டியிருந்தனர். அவரைத் தேடியும் வந்தனர்.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது, 2 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

விசாரணையில் இறந்தவர்களில் ஒருவர், அமர்நாத் யாத்திரைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி அபு இஸ்மாயில் என்பது தெரியவந்தது.

Leave A Reply

%d bloggers like this: