அகமதாபாத்,
அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 3 பேர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 56 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

இதனையடுத்து, இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மூவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.  இந்நிலையில், பீகார் மாநிலம் கயாவில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் இன்று மூன்று பேர் சந்தேகத்திற்கு உரிய வகையில் யாருக்கோ தகவல் அனுப்பியதாக அந்த சென்டரின் உரிமையாளர் போலீசில் தகவல் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார் மூவரையும் விசாரித்தனர். அப்போது, அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றவாளி என கூறப்பட்ட தபீக் கான் என்பவர் சிக்கியுள்ளார். இதையடுத்து, அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply