அரை ஏக்கர் நிலத்தகராறுக்கு கோர்ட்டுக்கு சென்றால் நீதி கொடுக்க 50 ஆண்டு கடந்து ஆயுசே போனது. அதற்காக வெட்கப்பட்டதில்லை.

போலி சாமியார்களுக்கும், வழக்குகளில் சிக்கியவர்களுக்கு நீதிமான்கள் சேவகம் செய்ததற்காக வெட்கப்பட்டதில்லை.

ஒரே வழக்கில் கீழ் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு. மேல் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு தருகிறோம் என்பதற்காக வெட்கப்பட்டதில்லை.

தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தனியார் பள்ளிகளில் பெற்ற பிள்ளைகளுக்கும், பேரன்களுக்கும் இலவசமாக சீட் வாங்கியதற்கு வெட்கப்பட்டதில்லை.

நீதிமான்களாக இருந்த பின்னரும் ஏதாவது ஒரு அரசு பதவியில் ஒட்டிகொள்ள ஆசை வரும்போது வெட்கப்பட்டதில்லை.

அரசாங்கம் இலவசமாக கொடுக்கவேண்டிய கல்வியை கோடி, கோடியாக கொள்ளையடிப்பதற்கு தாரை வார்த்த அரசாங்கத்திடம் நாமும் கை நீட்டி சம்பளம் வாங்குகிறோமே என்பதற்காக வெட்கப்பட்டதில்லை.

குமாரசாமிகளின் கணக்குகளுக்காக வெட்கப்பட்டதில்லை.

ஆனால் எந்த வர்க்கமும் தனது உரிமைக்காக போராடினால் மட்டுமே வெட்கப்படவேண்டும் என விரும்பும் மைலார்டுகள்.

Leave A Reply

%d bloggers like this: