நய்பிய்டா;
மியான்மரில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து வருகின்றன.இதன் காரணமாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்.

சர்வதேச நாடுகள், தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் கலைந்துவிட்டு மனிதாபிமான அடிப்படையில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்று ஐ. நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது.இதுகுறித்து ஐ. நா. பொது செயலாளருக்கான செய்தித் தொடர்பாளர் ஸ்டிபன்னே டுஜாரிக் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவது குறித்து எங்களது நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். மக்கள் வலுகட்டாயமாக அவர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.சர்வதேச நாடுகள் அனைத்தும் தங்களிடையே நிலவும் வேறுபாடுகளை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும்.தற்போது வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியாக்களுக்கு மியான்மர் அரசு மற்றும் செஞ்சிலுவை சங்கங்கள் உதவி செய்து வருகின்றன.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் இதயத்தை நொறுக்கும்வண்ணம் உள்ளன.

Leave A Reply