நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கேட்டு போராடியதற்காக சிறையில் வைக்கப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் 31 பேர் புதனன்று (செப்.13) புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். செப்.7 அன்று நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் சங்கத் தலைவர்கள் 3 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூரில் போராட்டம் நடத்தியதற்காக வாலிபர், மாணவர் சங்கத் தலைவர்கள் 9 பேர் சிறையில்  அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு எழும்பூர் 5 மற்றும், 14வது நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர்.

செப். 12 அன்று சென்னையில் தலைமை செயலகம் நோக்கி மாணவர் பேரணி நடத்தினர். இப்பேரணியில் அத்துமீறிய காவல்துறையினர், பலப்பிரயோகம் செய்து நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இவர்களில் 23 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 19 பேரை எழும்பூர் 14வது நீதிமன்ற நீதிபதி முன் நிறுத்தினர். 19 பேருக்கும் சொந்த ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: