ஹரித்துவார்;
மனிதர்கள் அனைவரும் பிறக்கும் போது இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் புதுப்புரளி ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார். உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அப்போது மனிதர்கள் அனைவருமே பிறக்கும்போது இந்துக்களாகத்தான் பிறக்கிறார்கள் என்றும், அதன்பின்னர் அவரவர் நம்பிக்கைக்குத் தக்கபடி மாற்று மதத்தினராக மாறி விடுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மோகன் பகவத்தின் இந்தப் பேச்சு மற்ற மதத்தினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் கூட்டத்தையே சற்று குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: