சமீபகாலமாக சாமியார்கள் மீதான பாலியல் பலாத்காரம், மோசடி வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து 13 அக்காராக்களின் ஒன்றிணைந்த குழுமமான அகில பாரதிய அக்காரா பரிஷத் கடந்த ஞாயிறன்று அலகாபாத்தில் மஹந்த் நரேந்திர கிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. கூட்டத்தின் முடிவில் குர்மீத் ராம் ரஹீம் சிங், 76 வயதான ஆசா ராம் பாபு, அசுமல் சிருமாளனி , நாராயண் சாய், ராதே மா, சச்சினாந்தா கிரி, அசீமானந்தா, பிரகஸ்பதி கிரி, ராம் பால், இச்சாதரி பீமானந்த், நிர்மல் பாபா,ஓம்ஜி , ஆச்சார்யா குஷ்முனி ஆகிய 14 பேரை போலி சாமியார்கள் என அறிவித்தது.

இந்நிலையில் , நித்யானந்தா மீது 2009 ஆம் ஆண்டு கர்நாடாகவில் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நித்யானந்தா பெயரில் இருக்கும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது 7 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகில பாரதிய அக்காரா பரிஷத் வெளியிட்ட போலிச் சாமியார் பட்டியலில் சுவாமி நித்யானந்தா பெயர் இடம் பெறாதது தற்போது விவாதத்தை எழுப்பியுள்ளது.

ஆலோசனை கூட்டத்தின் போது ஜூனா அக்காராவின் தலைமை சாமியாரான ஹரி கிரி, போலிச் சாமியார்களின் பட்டியலில் நித்யானந்தாவின் பெயரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது ,
மகாநிர்வானி அக்காராவை சேர்ந்த பிரதிநிதிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் என நிர்வானி அக்காராவின் தலைமை மடாதிபதி தாராம் தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, குர்மீத் ராம் ரஹீம் சிங் கைதுக்கு பிறகு மக்களிடம் தாங்கள் இழந்த செல்வாக்கையும், மதிப்பையும் திரும்ப பெறுவதற்காகவே இந்த அவசர போலி சாமியார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மகாநிர்வானி அக்காரா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் ஆலோசனை கூட்டத்தில் நித்யானந்தா குறித்து ஆலோசிக்கப்பட்டது. எங்களது வாதங்களை மகாநிர்வானி அக்காரா பிரதிநிதிகள் ஏற்க மறுத்ததால் நித்யானந்தாவின் பெயர் போலி சாமியார்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

2013 அலகாபாத் கும்பமேளாவில் நித்யானந்தாவிற்கு , மகாநிர்வானி அக்காராத்தால் மகாமண்டலேஷ்வர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்போதே பல அக்காராக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் , நித்யானந்தா மகாநிர்வானி அக்காராவிற்கு ரகசியமாக குரு தட்சணை வழங்கி இந்த பட்டத்தை பெற்றுள்ளார் என குற்றம்சாட்டினர். இதன் காரணமாக நிரஞ்சனி மற்றும் ஜூனா அக்காராக்கள் , அலகாபாத் கும்பமேளாவில் பங்கேற்கும் சாமியார்களை அழைத்து , நித்யானந்தாவிற்கு மகாமண்டலேஷ்வர் என்ற பட்டம் வழங்க கூடாது என் கண்டனம் தெரிவித்தனர் என்றார்.

போலிச்சாமியார்களின் பட்டியலில் நித்யானந்தாவின் பெயர் சேர்க்காதது , சாமியார் சமூகத்தின் மதிப்பை காத்துக்கொள்ள அகில பாரதிய அக்காரா பரிஷத் எந்த ஒரு தீவிரமான நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என தெளிவாக தெரிகிறது என ஹரிதுவாரில் உள்ள திக்காம்பரி அக்காராவை சேர்ந்த பாபா ஹாத்யோகி தெரிவித்துள்ளார்.

பட்டம் வழங்குவதற்காக எப்பொழுது அக்காராக்கள் பணம் பெற்றுக்கொள்கிறதோ, அப்போதே அவர்களின் கைகள் கட்டப்பட்டுவிடுகிறது. இந்த நடைமுறை பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இதை திருத்திக்கொள்வதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. பலரும் பெயரளவில் தான் சாமியார்களாக இருக்கிறார்கள். பின் அவர்களால் எப்படி மற்றவர்களை குறை கூற முடியும் என அயோதியாவில் உள்ள ராமஜென்மபூமி தலைமை சாமியாரான சத்யேந்திர தாஸ் கூறியுள்ளார்.

நொய்டா-வில் சொந்தமாக பார் வைத்து நடத்தி வரும் சச்சினாந்தா கிரியை கடந்த 2015-ல் தலைமை சாமியாராக நியமிக்க காரணமாக இருந்தவர் அகில பாரதிய அக்காரா பரிஷத் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி. 2012-ல் ஜூனா அக்காராவின் தலைமை சாமியாராக ராதே மா-வை நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாமண்டலேஷ்வர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும் என ஜூனா அக்காராவை சேர்ந்த ஹரி கிரி வலியுறுத்தினார்.

சச்சினாந்தா கிரி, ராதே மா ஆகிய இருவரின் பெயரும் போலிச் சாமியார்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், அவர்களின் வளர்ச்சிக்கு உதவிய அகில பாரதிய அக்காரா பரிஷத் , சமூகத்தில் சாமியார்களின் செல்வாக்கையும், மதிப்பையும் எப்படி திரும்ப பெறுவார்கள் என்பது கேள்விக் குறியே?

https://scroll.in/article/850321/fake-babas-why-rape-accused-swami-nithyanand-is-not-on-the-apex-sadhu-bodys-blacklist

Leave A Reply

%d bloggers like this: