புதுதில்லி, செப்.13-

பாஜக ஆளும் ஹரியானா, உத்தர்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் எவ்வாறெல்லாம் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிறோம் என்று புதுதில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்போம் என்கிற அமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இறைச்சி விற்பனையாளர்கள், மீன் விற்பனையாளர்கள் மற்றும் டெம்போ ஓட்டுநர்கள் மற்றும் விவசாயிகள் எடுத்துரைத்தார்கள்.

சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்போம் என்கிற அமைப்பு கல்லூரி ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், மாணவர்கள் மற்றும் செயல்வீரர்களை உள்ளடக்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் தில்லியில் செயல்பட்டு வருகிறது. இது புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூசன் கிளப்பில் சிறிய அளவில் இறைச்சி வணிகம் செய்பவர்களுக்காக ஒரு பொது கேட்புரை கூட்டத்தை (public hearing meeting) நடத்தியது. இக்கூட்டத்தில் இறைச்சி மற்றும் மீன் வியாபாரம் செய்பவர்கள், டெம்போ ஓட்டுநர்கள், சிறிய அளவில் பால் வியாபாரம் செய்பவர்கள், விவசாயிகள் மற்றும் சிறிய அளவில் உணவு விடுதிகள் வைத்திருப்போர் பங்கேற்றார்கள்.

இக்கூட்டத்தின் நோக்கம், இறைச்சி அறுக்கும் கூடங்கள், “பசுப் பாதுகாவலர்கள்” என்று தங்களைத்தாங்களே அழைத்துக் கொள்பவர்களால் தங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், இறைச்சி விற்பதனையும் எவ்விதமான அசைவு உணவும் விற்பதை உணவு விடுதிகளில் எவ்வித அறிவிப்புமின்றி தடை செய்திருப்பதையும் இவர்கள் எடுத்துரைத்தார்கள். மீன் விற்பவர்களும், விவசாயிகளும், டெம்போ ஓட்டுநர்களும் எப்ப்டியெல்லாம் தாங்கள் கொடுமைகளுக்கு உள்ளாவதாகவும் தங்கள் வாழ்நிலைமையே எந்த அளவிற்கு தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதையும் இவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இவ்வாறு இவர்கள் கூறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து   ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி. ஷா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இதழியலாளர் சபா நக்வி, வழக்குரைஞர் சூரூர் மண்டர் தலைமைக்குழுவாக இருந்து இவர்கள் கூறுவதை எல்லாம் செவிமடுத்தார்கள்.  சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்போம்  அமைப்பின் உறுப்பினர் ஷீபா ஃபரூக்கி இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

(ந.நி)

Leave A Reply

%d bloggers like this: