போபால்,

மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவேட்டின் போது ஜெய்ஹிந்த் என்று செல்ல வேண்டும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய்ஷா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என உத்தரவுக்கு பின்னர் தற்போது வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாணவர்கள் வருகை பதிவேட்டின் போது Yes Sir / Madam என்று சொல்வதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று செல்ல வேண்டும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக சாட்னா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. சாட்னா மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய்ஷா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் விஜய்ஷா கூறியதாவது, தேசப்பற்றை மாணவர்களிடம் ஊட்டும் வகையில் ஜெய்ஹிந்த் சொல்லும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த் அனைத்து தரப்பு மாணவர்களுக்கு ஏற்கத்தக்கது, எனவே அதை அறிமுகப்படுத்த முடிவு செய்தேன். நமது கலாச்சாரத்தை இளைய தலைமுறை மறந்துவிடக்கூடாது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: