அகமதாபாத்;
குஜராத் வன்முறைகளில் மிக கொடூரமான நரோடா காம் படுகொலை வழக்கில், சாட்சியம் அளிக்க வருமாறு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா-வுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு மோடி ஆட்சியின்போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த வன்முறைகளில் நரோடா பாட்டியா, நரோடா காம் படுகொலைகள் மிகவும் கொடூரமானவை ஆகும்.

நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நரோடா காமில் 11 முஸ்லிம்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

நரோடா பாட்டியா வழக்கில் மாயா கோட்னானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்தான் மாயா கோட்னானி.
நரோடா காம் வழக்கிலும் மாயா கோட்னானி உட்பட 82 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த படுகொலையின் போது தாம் அகமதாபாத் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்ததாக மாயா கோட்னானி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆதரவாக சிலர் சாட்சியம் அளித்திருந்தனர்.அத்துடன் தாம் மருத்துவம் பார்த்ததற்கு தற்போது பாஜக தலைவராக உள்ள அமித்ஷாவும் சாட்சி எனவும் மாயா கோட்னானி கூறியிருந்தார். இதையடுத்து அமித்ஷாவை சாட்சியம் அளிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
அதன்படி செப்டம்பர் 18-ஆம் தேதி சாட்சியம் அளிக்க வருமாறு, அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Leave A Reply