திருவனந்தபுரம்;
ஓணம் தினத்தன்று மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் ’வெளிப்பாடிண்டே புஸ்தகம்’.இப்படத்தில் இடம்பெற்றிருந்த ’ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடலை படத்தின் ரிலீஸுக்கு முன்னரே வெளியிட்டிருந்தனர்.

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேபை பெற்ற இந்த பாடல் இணையத்தளத்தில் சக்கை போட்டு வருகிறது.

இந்நிலையில் ஓணம் திருநாளைக் கொண்டாடும் வகையில் எர்ணாகுளம் புனித தெரசா கல்லூரி மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு குழுவாக நடனம் ஆடி வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

ஆனால் இந்த படத்தின் பாடலை விட கல்லூரி மாணவிகள் ஆசிரியர்கள் ஆடிய ஜிமிக்கி கம்மல் தான் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது அது பலருக்கும் பிடித்துப்போக இணையத்தில் ட்ரெண்டானது.இந்த பாடலை புனித தெரசா கல்லூரி ஷெரில் தொகுத்துள்ளார்.

இப்பாடல் கேரளாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் ஆச்சர்யப்படும் வகையில் இணையதளத்தில் ஹிட் அடித்து புதிய வரலாற்று பெருமையை தட்டிச்சென்றுள்ளது.அந்த வீடியோவைப் பார்த்து பலரும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினரோடு நடனமாடி அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து புது ட்ரெண்ட் அடித்துள்ளனர்.

Leave A Reply