தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தற்போது தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 14 உதவி பாதுகாவலர் (குரூப்-1ஏ) பணியிடங்களை நேரடி நியமனங்கள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்வை வெளியிட்டு உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தமிழ்நாடு

பணி:Assistant Conservator of Forests.

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 21 முதல் 30, 35க்குள் இருக்க வேண்டும். (அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து சலுகையை தெரிந்துகொள்ளவும்)

தகுதி: வனவியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், புவியியல், விவசாயம், தோட்டக்கலை, விவசாய பொறியியல், சிவில், கெமிக்கல், கணினி/கணினி அறிவியல், மின் பொறியியல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: முதல்நிலை தேர்வு கட்டணம் ரூ.100. முதன்மை தேர்வு கட்டணம் ரூ.200.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.10.2017

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 17.12.2017. முதல்நிலை தேர்வு முடிவு அறிவிப்புக்கு பின்னர் முதன்மை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_21_Not_EN_Assistant_Conservator_of_Forests.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: