பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் நிரப்பப்பட உள்ள டிப்ளமோ டிரெய்னி, பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொறியியல் துறையில் 70 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், சிவில், ஐடி பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அதிகபட்சம் 27க்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்ப்படுபவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.16,500 வழங்கப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.300 செலுத்தி றறற.யீடிறநசபசனைiனேயை.உடிஅ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு 26.9.2017 தேதி கடைசியாகும்.

மேலும் வயதுவரம்பு சலுகை, எழுத்துத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: