தாராபுரம், செப்.13-
ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தாராபுரத்தில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். எட்டாவது ஊதிய  மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். அதுவரை 20 சதம் இடைக்கால நிவாரணம் வழங்கிடவேண்டும். சிறப்பு காலமுறை தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரியும் சிஐடியு சங்கத்தின் சார்பில் தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாராபுரம் தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் துணை செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் என்.கனகராஜ், தாராபுரம் தாலுகா பொது தொழிலாளர் சங்க தலைவர்பி.பொன்னுச்சாமி, அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி என்.முத்துச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply