சென்னை;
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேநாளில் நாமக்கல் காண்ட்டிராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது.

இதனைத் தொடர்ந்து சில நாட்களில் தமது பண்ணை வீட்டில் சுப்பிரமணியன் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டது. இருப்பினும் சுப்பிரமணியன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுப்பிரமணியன் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால் சிபிசிஐடி போலீசார் பழனியப்பனிடம் ஏற்கனவே விசாரணை நடத்தினர். தற்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பழனியப்பனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், குடகு ரிசார்ட்டில் இருக்கும் பழனியப்பன் ஆஜராகவில்லை. இதனால் தமிழக போலீசார் ரிசார்ட்டுக்கே சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பழனியப்பனை சிபிசிஐடி போலீசார் கைது செய்ததாக தகவல் பரவியது. ஆனால் தினகரன் இதை மறுத்திருந்தார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனியப்பனுக்கு முன்ஜாமீன் கேட்டு அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Leave A Reply