மன்னார்குடி, செப்.13
சட்ட விரோத மணல் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும்.  கடத்தலில் ஈடுபடும் லாரிகள்மீது உரிய வழக்குகளைபதிவு செய்வதுடன், மணலை பறிமுதல் செய்து  லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் மீது நடவடிடக்கை எடுக்க வேண்டும்.  கொள்ளைக்கு  துணை போகும் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்கிழமையன்று மன்னார்குடியில் நடைபெற்றது.
பெரியார் சிலை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு  லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பைங்காநாடு எம். இராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜி. சாமிநாதன். பொருளாளர் சேரன் சு. செந்தில்குமார்,சங்க ஆலோசகர் ஆர்.பி.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை சிபிஐ மாவட்ட செயலாளர் வை. செல்வராஜ் துவக்கி வைத்தார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் ஜி.பாலு, திருத்துறைபூண்டி லாரி உரிமையாளர் சங்க தலைவர் வி. ஆறுமுகம், காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன், சிபிஎம் நகர செயலாளர் டி. சந்திரா, நகரக்குழு உறுப்பினர் எஸ். ஆறுமுகம், சிபிஐ நகர செயலாளர் வி. கலைச்செல்வன், திராதவிடர் விடுதழைலக்கழக மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு உள்ளிட்டோர் கண்டனை உரையாற்றினார்கள். முடிவில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து சிறப்புரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: