நெல்லை,
கேரி கவருக்கு ரூ. 6 வசூலித்த ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 8000 அபராதம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை ரிலையன்ஸ் நிறுவனத்தில் கேரி பேக் வழங்கியதற்கு ரூ.6 வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்துகிருஷ்ணன் என்பவர் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் சேவை குறைபாட்டால் மன உளைச்சல் அடைந்த  முத்துகிருஷ்ணன் என்பவருக்கு ரூ.8000 ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. அந்த தொகையை வழங்கவில்லை என்றால் 6% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply