குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி   திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு செப். 19ஆம் தேதி வழங்கப்படும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து இவர்கள் மீது மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன.
இந்நிலையில் இந்த குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை புதனன்று (செப். 13) விசாரித்த நீதிபதிகள் செல்வம், கலையரசன் அடங்கிய அமர்வு தீர்ப்பை செப்டம்பர் 19ஆம் தேதி வழங்குவதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: