காப்பீட்டு பிரிமியங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப்பெற வலியுறுத்திக் கோரி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. காப்பீட்டு பிரிமியத்தின் மீது 18 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி விதிப்பை முற்றிலும் நீக்கக் கோரி  ஜி.எஸ்.டி கவுன்சிலின் உறுப்பினராக உள்ள புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமியை காப்
பீட்டு ஊழியர் சங்கத்தின் தென்மண்டல பொதுச்செயலாளர் த.செந்தில்குமார், துணைத் தலைவர் கே.சுவாமிநாதன், பொருளாளர் ஆர்.கே. கோபிநாத் ஆகியோர் புதனன்று (செப். 13) சட்டப்பேரவையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜூலை 1 முதல் அமல்படுத்தப் பட்டுள்ள ஜி.எஸ்.டி வரி 18 விழுக்காடு எல்.ஐ.சி பிரிமியம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் மீது விதித்திருப்பதால் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி மிகப் பெரும் நெருக்கடியை சந்தித் துள்ளது. ஏற்கனவே காப்பீட்டு பிரிமியங்கள் மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரு
கிறோம். பாலிசி பிரிமியங்கள் மீதான தாமதக் கட்டணம் மீது ஏற்கெனவே சேவை வரிகிடை
யாது. தற்போது அதன் மீதும் அந்தந்த வகைக் காப்பீடுகளுக்கு ஏற்ப ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. பாலிசித் தொகைக்கான வாரிசு நியமனம், திருத்தல், பாலிசி நகல் ஆவணம் வழங்குதல் ஆகிய சேவைக் கட்டணங்கள் மீதும் 18 விழுக்காடு ஜி.எஸ்.டி
வரி விதிக்கப்பட்டுள்ளது. முன்பு இவற்றின் மீது சேவை வரி கிடையாது.
இந்த வரிவிதிப்பால் சாதாரண மக்களுக்கும் காப்பீட்டை பரவலாக்குதல் என்கிற இலக்கு
களுக்கு எதிரானது. எனவே, சமுகப்பாதுகாப்பை அளிப்பது என்கிற பொறுப்பிலிருந்து அரசு
நழுவுவது இதைக் காட்டுகிறது. மேலும் எல்.ஐ.சி என்கிற அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்க
ளின் செயல்பாட்டையும் இவ்வரி விதிப்பு பாதிக்குமென எல்ஐசி ஊழியர் சங்கம் அரசுக்கு சுட்டிக் காட்டுகிறது.
எனவேதான் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் தாமாக முன்வந்து இதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி பிரதமருக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஜி.எஸ்.டி கவுன்சிலில் உறுப்பினராக உள்ள புதுச்சேரி முதல்வர்
நாராயணசாமி இப்பிரச்சனையை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி வரி 18 விழுக்காட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது வேலூர் கோட்டச் சங்க தலைவர் டி.மணவாளன், பொதுச்செய
லாளர் எஸ்.ராமன், புதுச்சேரி சாரம் கிளைச்சங்க செயலாளர் வி.நாகராஜன், பொருளாளர் பி.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: