ஹைதராபாத்;
ஆர்ய வைஸ்யர்கள் பற்றி எழுதிய நூலுக்காக தனக்கு மிரட்டல் வருவதாக, எழுத்தாளரும், சிந்தனையாளருமான பேராசிரியர் காஞ்சா அய்லய்யா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.“நான் ஏன் இந்து அல்ல” என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியரான காஞ்சா அய்லய்யா, அண்மையில், ளுயஅயதமைய ளுஅரபபடரசடர முடிஅயவடிடடர (வைஸ்யர்கள் சமூகக் கடத்தல்காரர்கள்) என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த புத்தகத்திற்காகவே அவரை வசைபாடி தொடர்ந்து போன்கால்களும், மிரட்டல்களும் வந்து கொண்டிருப்பதாக காஞ்சா அய்லய்யா, ஓஸ்மேனியா பல்கலைக் கழக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

“நான் பயங்கரமாக அச்சுறுத்தப்படுகிறேன்; தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன; தெருக்களில் எனக்கு எதிராக பயமூட்டும் செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்” என்று காஞ்சா அய்லய்யா கூறியுள்ளார்.

காஞ்சா அய்லய்யாவுக்கு எதிராக, ஹைதராபாத்தில் உள்ள ஆர்ய வைஸ்ய சங்கத்தினர் அண்மையில் போராட்டம் நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply