கோவை, செப்.13-
சமூக நீதிக்கு சவக்குழிவெட்டும் நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும். மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் எனக்கோரி புதனன்று தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுவின் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்களூர் பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொருளாளர் ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் சுசி.கலையரசன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், மனித நேய கட்சி ஜாபர் சாதிக், தமுமுக அப்துல்கரீம், எஸ்டிபிஐ அப்துல்கரீம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் பேருந்து நிலையம் அடுத்த மோகனூர் சாலையிலுள்ள அண்ணா சிலை அருகே அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.ரங்கசாமி, சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் தம்பிராஜா, திமுக மாநில துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி. திமுக கிழக்கு மவட்ட பொருளாளர் பாரி இளங்கோ, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர தலைவர் ராஜா முகமது மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், ஆதித்தமிழர் பேரவை, திக உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சேலம்:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக மத்திய மாவட்ட செயலாளர் இரா.இராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், விசிக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், காங்கிரஸ் ஜெயபிரகாஷ் உள்ளிட்டு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதேபோல், சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, தாலுகா செயலாளர் எஸ்.கே.சேகர், மாவட்ட குழு உறுப்பினர் என்.ஜெயலட்சுமி உள்ளிட்டு அனைத்து கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன் திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் தாலுகா செயலாளர்கள் பழனிமுத்து, என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டு அனைத்து கட்சி பிரமுகர்கள் எண்ணற்றோர் பங்கேற்றனர்.

நீலகிரி:
நீலகிரி மாவட்டம், உதகை மார்கெட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் ப.முபாரக் தலைமை வகித்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பெள்ளி, திமுக முன்னாள் அமைச்சர் ராமசந்திரன், காங்கிரஸ் கட்சியின் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், திமுக கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன், தொகுதி செயலாளர் ராஜேந்திரபிரபு, திமுக ரவிக்குமார், ராமசாமி, பர்லியார் பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் பிரேம்குமார் மற்றும் அனைத்துகட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர்:
திருப்பூர் தியாகி குமரன் சிலை அருகில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் ஈஸ்வரன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி), ஆறுமுகம் (திராவிடர் கழகம்), சோழர் (ஆதித்தமிழர் பேரவை), சுந்தரபாண்டியன் (ஆம்ஆத்மி), முகமது (மனிதநேய மக்கள் கட்சி), சத்யன் (விடுதலை சிறுத்தைகள்), அம்சா (முஸ்லிம் லீக்), கோபி, ஆர்.கிருஷ்ணன் (காங்கிரஸ்), செ.முத்துக்கண்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), எம்.ரவி (இந்திய கம்யூனிஸ்ட்), க.செல்வராஜ் (திமுக) ஆகியோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

தாராபுரம் பஸ்நிலையம் எதிரே தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கனகராஜ், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட செயலாளர் அலங்கியம் ஈஸ்வரமுர்த்தி, தாராபுரம் ஒன்றிய திமுக செயலாளர் செந்தில் குமார், நகர செயலாளர் தனசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சரவணன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: