லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பத்ராசா கிராமத்தில் கழிப்பறை இல்லாத வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பத்ராசா கிராமம் சரோஜினி நகர் பகுதியில் கழிப்பறை இல்லாத வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.. இதையடுத்து அப்பகுதி மக்கள், மின்சாரம் இல்லாமல் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். கழிப்பறை கட்டுவதற்கு எங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என நகரின் வளர்ச்சி அதிகாரியிடம்  கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: