திருப்பூர், செப்.13 –
அலைபேசி கோபுரங்களை நிறுவிப் பராமரிப்பதை பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் இருந்து பிரித்து துணை நிறுவனம் உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை வழங்கியதைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்கக் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். இதில் மத்திய அரசின் இம்முடிவு பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் துண்டாடி சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது என்று கண்டனம் முழங்கப்பட்டது.

அத்துடன் ஈரோட்டில் தன்னிச்சையாக 33 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் வீரஞ் செறிந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு வாழ்த்துத் தெரி
வித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேற்கண்ட மூன்று கோரிக்கைகள் குறித்து கிளைச் செயலாளர்கள் விஸ்வநாதன், குமரவேல், மாவட்ட நிர்வாகி முகமது ஜாபர் மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க நிர்வாகி ரமேஷ் ஆகியோர் உரையாற்றினர். திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவை:
இதேபோல், கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் மகேஷ், ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவர் வி.சசிதரன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, கிளைச் செயலாளர் ஆர்.பிரபாகரன், எஸ்என் இஏ செயலாளர் ஆர். அன்பரசு,ஓய்வூதியர்கள் சங்கத்தின் எம்.ஜெயமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில், ஜி.சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.

Leave A Reply