கவுகாத்தி
அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போலிச்சாமியார் பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் காலவதியான உணவுப் பொருட்களை வழங்கி உள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மாநிலம் எங்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.  பலர் வெள்ளத்தின் பாதிப்பால் வீட்டை இழந்தனர். அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  அவர்களுக்கு பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் உதவி அளித்து வருகின்றன.  அவற்றில் பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனமும் ஒன்றாகும். சுமார் ரூ. 12 கோடி மதிப்பிலான உணவுப் பொருட்களை பதஞ்சலி நிறுவனம் வழங்கியது.
ஆனால் அந்த உணவுப் பொருட்களில் பாதிக்கு மேல் காலாவதியான பொருட்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  அனைத்தும் பாக்கிங் செய்யப்பட்ட படி உள்ளதால் இதை மக்களுக்கு வழங்கும் போது ஊழியர்கள் தேதியை கவனிக்காமல் கொடுத்து உள்ளனர்.  பிறகு அதை வாங்கிய மக்கள் அதில் குறிப்பிட்டுள்ள உபயோகப்படுத்த கடைசி தேதியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.  பெரும்பாலானவைகளில் கடைசி தேதியாக அக்டோபர் 2016 என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து அசாம் மாவட்ட நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: