லாகூர்;
2009-ல் மார்ச் இலங்கை அணியினர் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் விளையாட பல்வேறு அணிகள் அச்சம் தெரிவித்து வந்தன.2015-ம் ஆண்டு மே மாதம் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் விளையாடிய போது கூட ஐசிசி ஆட்ட நடுவர்கள், களநடுவர்களை அனுப்ப மறுத்து விட்டது.

பாகிஸ்தானுக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் திரும்பும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த உலக லெவன், பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று ஐசிசி  ஆதரவுடன் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக டுபிளெசிஸ் தலைமையிலான உலக லெவன் அணி மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகிறது.

வரலாறு காணாத பாதுகாப்பு;                                                                                                                                                           அல்லமா இக்பால் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 5 நட்சத்திர விடுதிக்கு உலக அணி வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். வரும் வழியெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அணி வீரர்கள் பேருந்து வரும் பாதையை எட்ட முடியாமல் போக்குவரத்து மூடப்பட்டிருந்தது.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு இல்லை என்று ஏற்கெனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.

Leave A Reply