திருப்பூர், செப்.12 –
திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் மே நகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க வேண்டும். ரேசன், எரிபொருள் மானியத்தை ரத்து செய்வதைக் கைவிட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் மக்களின் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளில் மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்திற்கு மாதர் சங்க கிளை நிர்வாகி ஈஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சி.பானுமதி, மாவட்டத் துணைத் தலைவர் ஈ.வளர்மதி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.கற்பகம் உள்ளிட்டோர் உரையாற்றினர். வாலிபர் சங்கத்தின் ஆ.சிகாமணி வாழ்த்திப் பேசினார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: