ஈரோடு, செப். 12-
மியான்மர் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை காரணமான குற்றவாளியை கைது செய்திடுக. மியான்மாரில் ரோஹிங்யா முஸ்லீம் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அங்கிருந்து அகதிகளாக வருவோரை பாதுகாக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஈரோடு காமராஜர் புரம், பழக்காரத் தெரு, பெரிய அக்ரஹாரம், வண்டிப் பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இப்பிரச்சார இயக்கத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் இஹாரத் தலி,மாவட்ட உதவித் தலைவர் டி.விஜயகுமார், மாநில குழு உறுப்பினர் முத்துபாவா, மாவட்ட பொருளாளர் நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து, அல் அமீன் கல்லூரி நிர்வாகி அப்துல் சத்தார், மாதர் சங்கத்தின் நிர்வாகி அம்மணிம்யமாள், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கே. ராஜ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர். இதில்திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: