துபாய்:
பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் பாதுகாப்பை காரணம் காட்டி மற்ற அணிகள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்தன.இதற்கு காரணம் லாகூரில் 2009ம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தான். தற்போது பாகிஸ்தானில் உலக லெவன் கூ20 தொடர் நடைபெற, ஐசிசி உதவி செய்துள்ளது. இது குறித்து ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் வெளியிட்ட அறிக்கையில், ‘’உலக லெவன் போட்டியை லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவது, உலக கிரிக்கெட்டிற்கு நல்ல நாள்.

இது பிசிபியின் நீண்ட மற்றும் கடினமான பயணம். தங்கள் சொந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கும், விளையாடுவதற்கும் வாய்ப்பு கிடைக்காமல், பாகிஸ்தான் ரசிகர்களும், வீரர்களும் வாடி வந்தனர்.

பாகிஸ்தானில் ஒரு சர்வதேச போட்டி நடைபெறுவது என்பது கிரிக்கெட் விளையாட்டிற்கும் நல்லதுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உதவிய சஷாங்க் மனோகர் இந்தியாவை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply