ராமேஸ்வரம்,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் திங்களன்று காலை 326 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது , அங்கு வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து மீனவர்கள் அங்கிருந்து திரும்பினர். ஆனால் மீனவர்களை  பின்தொடர்ந்து வந்த இலங்கை கடற்படையினர், துரைசிங்கம் என்பவருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர். கைது செய்த மீனவர்களை தலைமன்னார் முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: