சேலம், செப்.12-
ஜிஎஸ்டி வரி உயர்வால் வேலையிழந்துள்ளதாக கூறி பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர்கள் சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிகத்தில் சேலம், ஈரோடு, நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல், கரூர், கடலூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிலாக கையினால் சுருட்டும் பீடி மற்றும் சுருட்டு தொழில் இருந்துவருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இத்தொழிலுக்கு 28 சதவிகிதம் வரி விதித்துள்ளது. இதனால் இத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு இத்தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

எனவே, இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு ஜிஎஸ்டி வரிவிதிப்பை குறைக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று தமிழ்நாடு சுருட்டு தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாவட்ட நிர்வாகிகள் சி.மயில்வேலன், ஏ.கோவிந்தன், முருகன், எல்பிஎப் நிர்வாகி பொன்னுசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் தொழிலாளர் திரளான கலந்து கொண்டனர்.

Leave A Reply