பெங்களூரு; 
அதிமுக-விலிருந்து சசிகலா, தினகரன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தங்கியிருக்கும் குடகு விடுதியை தமிழக காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். கோவை பதிவெண் கொண்ட வாகனங்களில் சென்ற தமிழக காவல்துறையினர் சுமார் 20 பேர், குடகுவில் உள்ள விடுதியில் எம்எல்ஏ-க்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, சுய விருப்பத்தின்பேரிலேயே தங்கியிருப்பதாக எம்எல்ஏ-க்கள் கூறியதால் அவர்கள் திரும்பி வந்தனர். நாமக்கல் காண்ட்ராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில் பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ பழனியப்பனை கைது செய்யும் திட்டத்துடனும் போலீசார் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், பழனியப்பன் அங்கு இல்லாததால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

Leave A Reply